ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தைத் தொழில்நுட்ப நகரமாக மாற்ற முதற்கட்டமாக டிசிஎஸ் நிறுவனத்துக்கு சுமார் 21 ஏக்கர் நிலத்தை அடையாளத் தொகையாக வெறும் 99 பைசாவுக்கு ஆந்திர அரசு கொடுத்திருக்கிறது.
இதுதொடர்பாக டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஆந்திர அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, டாடா நிறுவனத்தின் தொழிற்சாலையை அமைக்க 99 பைசாவுக்கு நிலத்தைக் கொடுத்தார். அதனைப் பின்பற்றியே சந்திரபாபு நாயுடுவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.