சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிப் புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.