பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி நலனுக்காகக் கட்சி பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர், மக்கள் நலனுக்காக அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், பெண்களை ஆபாசமாகப் பேசிய பொன்முடிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.