கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டத்தில் உள்ள குருகோடு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட இருந்த இளம்பெண்ணைத் தாயிடம் இருந்து மீட்டு, அவரது காதலருடன் போலீசார் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
இதனை அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து இளம்பெண்ணை மீட்ட காவல் ஆய்வாளர், அவரது காதலருடன் திருமணம் நடத்தி வைத்தார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல் ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.