திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம் பகுதியில் சுற்றித்திரியும் மயில்கள் தோகைகளை விரித்தாடும் காட்சி காண்போரைக் கவர்ந்துள்ளது.
ஜலகாம்பாறை மலைப்பகுதியிலிருந்து ஏராளமான மயில்கள் உணவு தேடி வெளியேறும் நிலையில் அப்பகுதியில் உள்ள வயல்வெளி, தோட்டங்களில் சுற்றித்திரிகின்றன.
அந்த வகையில் மடவாளம் ஏரிப் பகுதிக்கு வந்த மயில்கள் தோகைகளை விரித்தாடின. இதனை நேரில் பார்த்தவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.