நக்சலிசத்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 86-வது தின விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அவர், வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமித்ஷா, சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் இருந்து உள்நாட்டுப் பாதுகாப்பு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சர்வதேச அமைதிக்கான பணிகள், விஐபி பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை வரை பல்வேறு பணிகளில் சிஆர்பிஎப் முக்கிய பங்காற்றி உள்ளது.