உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கியது. 3 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நீடித்து வரும் போரால் இரு நாடுகளும் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைனின் தெற்கு நகரமான ஒடேசாவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். கடந்த மூன்று வருடங்களில் நடைபெற்ற தாக்குதலில் இரு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.