பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாகக் கருதப்படும் என்றும், திருநங்கையாக மாறுவோரைப் பெண்ணாகக் கருத முடியாது எனவும் பிரிட்டன் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சமத்துவ சட்டத்தில், பாலினம் மற்றும் பெண் என்பதற்கான விளக்கம் தெளிவாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
அதன்படி, பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாகக் கருதப்படும் என்றும், திருநங்கையாக மாறுவோரைப் பெண்ணாகக் கருத முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், திருநங்கையரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.