வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Sep 21, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகியுள்ள நிலையில், அதனை சரிகட்ட பல கட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா….

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு பாயும் நிதியை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது அமெரிக்கா… அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இறக்குமதிகளுக்கு மாற்றாக, வெனிசுலா எண்ணெயை வாங்குமாறு இந்தியாவை வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

இந்த நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக வெனிசுலா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப கூறியிருக்கிறார்… புளோரிடாவுக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுடன் அமெரிக்கா ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதன்படி இந்தியா ஈரானுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான ஒப்பந்தத்தை உருவாக்கிவிட்டதாகவும் அவர் கூறினார். முந்தைய காலங்களில் ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா, அமெரிக்காவின் நீண்டகால தடைகள் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டது

இந்த சூழலில் இந்தியா விரைவில் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க மீண்டும் அனுமதிக்கப்படலாம் என்ற அமெரிக்காவின் சமிக்ஞைகளை தொடர்ந்து டிரம்பின் பேச்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன… அதேபோன்று வெனிசுலா எண்ணெயை வாங்குவதற்கு சீனாவிடமும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்..

இதனிடையே வெனிசுலாவின் இடைக்கால தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், அண்மையில் பிரதமர் மோடி உடன் பேசினார். அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்ததாகவும், வரும் ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்றியிருந்தார்..

ஒரு காலத்தில் இந்தியா லட்சக்கணக்கான பீப்பாய்கள் வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்தது. ஒரு கட்டத்தில் கராகஸின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியாக இருந்தது. ஆனால் 2010 ஆண்டிற்கு பிற்பகுதியில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கிய பின்னர் வர்த்தகம் கடுமையாக சரிந்தது.

இதனால் இரண்டாம் நிலை அபராதங்களைத் தவிர்க்க இந்திய நிறுவனங்கள் கொள்முதலைக் குறைத்தன… தற்போது அமெரிக்க அதிபரின் பேச்சால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Tags: usFloridaUS President TrumpVenezuelan oilRussian imports.IndiachinaRussia Ukraine warunited states of america
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு – காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள், பாஜகவினர் போராட்டம்!

Next Post

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies