ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், நெல்லையில் ரிசார்ட் போன்ற பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கரையிருப்பு பகுதியில் ‘ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ்” என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது. சொகுசு ரிசார்ட் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பு பகுதி, 40க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது.
குறிப்பாக 24 ணி நேர CCTV கண்காணிப்பு, தெரு விளக்குகள், அகலமான தார் சாலைகள் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது. இதுபற்றி பேசிய ஜி ஸ்கொயரின் நிர்வாக இயக்குநர் ராமஜெயம், ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ், தடையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்த திட்டமானது குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இணையற்ற வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.