உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா எனக் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவையின் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தையும், மசோதாக்கள் தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் கடுமையாக விமர்சித்தார்.
குறிப்பாக நாடாளுமன்றம் செய்ய வேண்டிய பணிகளை உச்சநீதிமன்றம் செய்து வருவதாகத் தெரிவித்த அவர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா எனவும், உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா என்றும் கேள்வி எழுப்பினார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் ஆனால் நீதிபதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இந்திய அரசியலமைப்பைப் பொறுத்தவரைக் குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநர்களும் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப்போல் உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதாகவும், குடியரசுத் தலைவரை உச்சநீதிமன்றம் வழிநடத்தும் முறையை ஏற்க முடியாது என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீதிபதி யஷ்வந்த் ஷர்மா வீட்டில் கோடி கோடியாகப் பணம் சிக்கிய வழக்கில் அவர் மீது ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பி,
அந்த சர்ச்சை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மேற்கொண்ட முடிவுகளைக் கடுமையாகச் சாடினார்.