வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
Aug 6, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டத் திருத்தத்தின் சில சரத்துகளைப் பார்த்து மட்டும் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான விரிவான எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது எனவும், ஏற்கனவே வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், புதிய சட்டப்படி எந்த வகைப்படுத்தலும் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து புதிய சட்டப்படி நிலங்களை வகைப்படுத்த மாட்டோம் எனவும், வக்ஃபு உறுப்பினர்களை நியமிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் 5 அல்லது 6 மனுக்களை விரிவாக விசாரித்து உத்தரவைப் பிறப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் வக்ஃபு வாரியம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: உச்சநீதிமன்றம்120 petitions filed against Waqf Act: Response must be given within 7 days - Supreme Court
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

Next Post

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? – ஜெக்தீப் தன்கர் கேள்வி!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies