ஈரோட்டில் முதியவரைக் கொலை செய்ய முயன்றதாகப் பொதுமக்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதிக்குப் போதையில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சுப்பிரமணியனின் கழுத்தை அறுத்துவிட்டு, ஜெயலட்சுமியை தாக்கிவிட்டுத் தப்பியோடினார்.
ஜெயலட்சுமி கூச்சலிட்ட நிலையில், அங்குக் கூடிய அக்கம் பக்கத்தினர், முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து வடமாநில இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், படுகாயம் அடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.