அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 300 பயணிகளும் அவசர சறுக்குகள் வழியாகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. ஓடுபாதையில் விமானம் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது.
இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, விமானத்தின் அவசர சறுக்குகள் வழியாகப் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.