தெலங்கானாவில் அமைச்சர்கள் வந்த ஹெலிகாப்டரின் காற்றின் வேகத்தால் கண்காட்சியின் வளைவுகள் சரிந்தன.
நிஜமாபாத்தில் விவசாயிகளுக்கான கண்காட்சிக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் ஹைதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்.
அப்போது, உருவான காற்றின் வேகத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு மற்றும் ஸ்டால்கள் சரிந்து விழுந்தன.
இந்த சம்பவத்தில் ஒரு சிலர் லேசான காயமடைந்தனர். ஹெலிகாப்டர் இறங்கியபோது பறந்த புழுதியால் பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.