பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பயங்கரவாதிகளையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நாம் அனுதாபம் காட்டத் தேவையில்லை என தெரிவித்தார்.
நாங்கள் மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மனைவிகள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவர்களைக் கொல்வது கோழைத்தனமான செயல் என்றும் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என தெரிவித்தார்.