காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்த காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கும் அவர் ந்ன்றி கூறினர்ர்.
காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என்று நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்வதாக கூறிய அவர், இது எங்கள் தவறு அல்ல. இவை அனைத்தும் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படுகிறது என தெரிவித்தார்
கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரிகளும் இதைப் பொறுத்துக்கொண்டிருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் நமது குழந்தைகள் குறிவைக்கப்படுவதாக செய்திகள் வருவதாக தெரிவித்தார்.
இது நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியின் எதிரிகள் அல்ல. அமைதியை விரும்புகிறவர்கள் என்றும் கூறினார். இது எங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என்றும் ஒமர் அப்துல்லா கூறினார்.