பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதமான கால சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கடற்படை வீரர் வினய் நார்வல், கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் பேட்டி அளித்துள்ளான். தீவிரவாதிகள் ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்குமாறு கூறியதாகவும் பின்னர் ஹிந்துக்களை மட்டும் அவர்கள்சுட்டுக் கொன்றதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.