தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதும் ஒரு மன்னரின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ‘தி இந்து மேனிஃபெஸ்டோ’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். முன்னதாக விழா மேடைக்கு வந்த அவர், ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய மோகன் பகவத், இந்தியர்கள் ஒருபோதும் பிற நாட்டவரை அவமதிக்கவோ, துன்புறுத்தவோ நினைப்பதில்லை என தெரிவித்தார். அகிம்சையே நமது கொள்கை எனக்கூறிய மோகன் பகவத், நாட்டை தொந்தரவு செய்யும் குண்டர்களுக்கு பாடம் புகட்டுவதும் இந்து தர்மம் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தீங்கு விளைவிப்பவரை தண்டிப்பதும், மக்களை பாதுகாப்பதும் ஒரு மன்னரின் கடமை என்றும் தெரிவித்தார்.