சேலம் கோட்டை பெருமாள் கோயில் ஊழியர்கள், உள் பிரகாரங்களில் செருப்புகள் கழற்றி விடுவதைத் தொடர்ந்து பின்பற்றினால் கடும் போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கோயில் ஊழியர்கள், அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர்கள் கோயில் உள் பிரகாரங்களில் தங்களது காலணிகளை கழற்றி விடுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து இந்து முன்னணியினர் நடத்திய போராட்டத்தால், உட்பகுதியில் இருந்த காலணிகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், மீண்டும் காலணிகளை உள் பிரகாரங்களில் விடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இந்து முன்னணியினர் தொடர்ந்து இதுபோன்ற செயல் அரங்கேறினால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.