தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் சென்னை மெரினாவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழில் கூட பிரிவினை வாதத்தை ஏற்படுத்தியவர்கள் திமுகவினர் என்றும் திமுக அமைச்சர்கள் 9 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டினார்.
ஏன் பாரதி, கம்பனை திமுகவினர் கொண்டாட மறுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியவர் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, இரவில் அணில்கள் ஓடுகின்றன என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.