பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் முப்படைத் தளபதிகள், அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து பிரதமர் இல்லத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை தந்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம், பாகிஸ்தான் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.