பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.
இதனையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த அவரை நேரில் சென்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவை தமிழக மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.