திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சயான் என்பவர் திருப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பனியன் கம்பெனியில் பணியாற்றிய கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் இந்தியக் குடியுரிமை பெறமுடிவில்லை என்றும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாகத் தங்கி இருந்த சயானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.