துல்லிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னிக்கு பாஜக எதிர்வினையாற்றியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அதை யாரும் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பாஜக, துல்லிய தாக்குதல் குறித்த ஆதாரம் வேண்டுமானால் ராகுல்காந்தி உடனே பாகிஸ்தான் சென்று பார்த்து விட்டு வரவும் எனக் கூறியுள்ளது. மேலும், இந்த தாக்குதல் நடந்தது குறித்தும், சேதங்கள் ஏற்பட்டது குறித்தும் பாகிஸ்தானே கூறியுள்ளது எனவும் பாஜக தெரிவித்துள்ளது.