பஹல்காம் தாக்குதலுக்குப் போர் தீர்வல்ல என நடிகையும், காங்கிரசை சேர்ந்தவருமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் பேசிய அவர், பாகிஸ்தானுடன் போரிடுவது ஒரு தீர்வாக அமையாது எனவும், போரின் இறுதியில் நமது வீரர்களும் இறப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், போர் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனாவின் கருத்து பாகிஸ்தானை ஆதரிப்பது போல் உள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.