ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
இதனிடையே, கடந்த 10 நாட்களாக சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
சிறிய ரக ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் சர்வதேச எல்லையை தற்செயலாகக் கடந்ததற்காக பாதுகாப்புப் படை வீரர் சாஹு பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.