திமுகவினர் ஊழல் செய்ததன் காரணமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கண்டு அஞ்சி நடுங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை தி.நகரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், குடும்ப ஆட்சி, மன்னராட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் அமையும் என தெரிவித்தார்.
திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும், எங்களது கூட்டணி வலிமையானது மட்டுமல்ல வெற்றிக் கூட்டணி என்றும் அவர் கூறினார். கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.