பிரதமர் மோடியை இந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், விமானப்படைத் தலைவர் அமர் ப்ரீத் சிங் பிரதமரை சந்தித்தாக கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சனிக்கிழமை பிரதமர் மோடியை கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு 26 பேர் கொல்லப்பட்ட அடுத்த நாள் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்றது.
அப்போது பயங்கரவாதத்திற்கு கடுமையான அடி கொடுக்கும் இந்தியாவின் உறுதியை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளும், அதன் பின்னணியில் சதி செய்தவர்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறப்பிடத்தக்கது.