பாகிஸ்தான் நாட்டின் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்களது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் நாட்டின் 16 யூடியூப் சேனல்களை இந்தியா முடக்கி இருந்தது.
இந்தியாவிற்கு எதிராகத் தவறான தகவல்களை இந்த யூடியூப் சேனல்கள் பகிர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.