சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
கொங்கு மண்டலத்தில் 4 மாதத்திற்கு ஒருமுறை காட்டுப்பகுதியில் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது என்றும் திமுக ஆட்சியில் 5,000-த்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
சிவகிரி இரட்டை கொலை சம்பவ குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணாமலை வரும் 20-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
சோமகவுண்டபாளையம் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் “திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுவதை எப்படி ஏற்பது?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விஜய் அடிக்கடி பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பால் இனி சாதியை வைத்து அரசியல் செய்ய முடியாத நிலை வரும் என அண்ணாமலை குறிப்பிட்டார்.