பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ப. சிதம்பரம் என்றும் மதுரை ஆதினத்திற்கு ஆதரவாகவே என்னுடைய குரல் இருக்கும் என்று எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் அறிக்கையை நம்பமுடியாது என அவர் கூறினார்.