தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் குறித்து திமுக அரசு அலட்சியமாக இருப்பது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாகக் கோவை மாறிக்கொண்டிருக்கிறது என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
நூற்றுக்கணக்கான தியாகிகளைக் கொண்டு செயல்படக்கூறிய ஒரே கட்சி பாஜக தான் என்றும் இந்தியாவில் இன்று நாம் பாதுகாப்பாக இருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடி தான் என வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் NIA நான்கு குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியின் பெருமை என்றால் ஆதீனங்கள் தான் என்றும் தேசிய புலனாய்வு முகமை ஒவ்வொரு முறை தமிழகத்தில் சோதனை நடத்தும் போதும் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்களைப் பற்றி திமுக அரசு பாராமுகமாக இருப்பது வேதனை அளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சட்ட விரோதமாகத் தமிழகத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.