ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழி தீர்க்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இயங்கிய தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளித்த அவர், திட்டமிட்டபடியே தீவிரவாதிகளின் முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டதாகக் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாகச் செயலாற்றிய இந்திய முப்படைகளுக்கு நன்றி தெரிவித்த ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழி தீர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.