பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு சூழலுக்கான ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மும்பை கிராஸ் மைதானத்தில் போர் சூழலில் மக்களை மீட்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
டெல்லியின் கான் மார்க்கெட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் எம்.ஐ.சாலையில் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதே போல் மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் ஹைதராபாத்தின் கச்சிகுடா ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.