மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் வெற்றிகரமாக முடியடிக்கப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு எல்லையில் ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் நடத்தியதாகவும், ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், எல்லைப்பகுதியில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இந்திய இராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும், அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இநதிய ராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது.