இந்தியாவின் 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குலை தீவிரப்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கி அழித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் பதான்கோட், அக்னூர், பாராமுல்லா, அவந்தி நகர், அவந்திபோரா, ஃபெரோஸ்பூர் உள்ளிட்ட 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த ட்ரோன்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. மேலும், 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைதொடர்ந்து, பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூரில் வீசப்பட்ட டிரோன் தாக்கியதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றின. இதில் காயமடைந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் முழு வீச்சில் பீரங்கி தாக்குலை தீவிரப்படுத்தி உள்ளது.