இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், எந்த எதிர்பாராத சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனைத்து வங்கிகளும் தயாராக வேண்டும் என்றும், இதற்காக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன், ஏடிஎம்களில் போதியளவு பணம் இருக்க வேண்டும் என்றும், யுபிஐ மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர நடவடிக்கை தேவை எனவும் உத்தரவிட்டுள்ளார்.