டெல்லியில் BSF மற்றும் CISF இயக்குநர் ஜெனரல்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் BSF மற்றும் CISF இயக்குநர் ஜெனரல்கள், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து நாட்டின் எல்லைகள் மற்றும் வான் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமித்ஷா கேட்டறிந்தார்.