பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே பாகிஸ்தான் வீசிய வெடிகுண்டு வெடித்ததில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சிச்ரா கிராமத்தில் அதிகாலை 4.45 மணியளவில் பாகிஸ்தான் வீசிய வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால், வயல்வெளி பகுதியில் ராட்சத பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், ராணுவ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.