நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், நமது அண்டை நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும், நமது நாட்டின் 7 ஆயிரம் கிலோ மீட்டர் கடல் எல்லையைச் செயற்கைக்கோள் வழியாகவே கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், நமது செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாவிட்டால், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது என வி.நாராயணன் குறிப்பிட்டார்.