எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஞாயிறு காலை முதல் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை.
இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதியில் நேற்றிரவு போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் தகவல் வெளியானது.
டிரோன் தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.