மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடலில் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் கடந்த வாரம் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாரியூர் கடலில் மீனவராக வேடமிட்ட சிவபெருமான், திமிங்கலம் உருவத்தை அடக்கி பார்வதி தேவியை மணக்கும் வலைவீசும் படலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.