நூர்கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவ தளபதி பதுங்குழியில் பதுங்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கிக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகே போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவை பாகிஸ்தான் அணுகியது. பின்னர் DGMO-க்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நூர் கான் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.