ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் மூவர்ண கொடி பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். திரங்கா சவுர்ய சம்மன் யாத்திரை என்ற இந்த பேரணியை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார்.
இதேபோல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பேரணியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பாதுகாப்புப் படையினரை கவுரவிப்பதற்காக நடைபெற்ற இப்பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற திரங்கா யாத்திரையை அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி வழிநடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பயணித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.