பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னையில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பயங்கரவாதத்தின் புகலிடமாகத் திகழும் பாகிஸ்தானுக்கு எதிராக நமது இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ள யுத்த வேள்வியில் பயங்கரவாதம் முழுமையாக வேரறுக்கப்பட வேண்டும், தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அச்சமின்றி நெஞ்சுரத்தோடு முன்னேறும் நமது படை வீரர்களின் ஆன்ம பலம் வலுப்பெற வேண்டும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அனைத்து பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அந்த தெய்வம் துணைநின்று நிரந்தர வெற்றிக்கான பாதையில் அவரை வழிநடத்த வேண்டும் ஆகிய பிரார்த்தனைகளோடு சென்னை தி.நகரில் இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதில் தமிழ்நாடு பாஜக துணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெடடி, பாஜக மூத்த தலைவர் கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.