பாகிஸ்தானில் உள்ள எந்த அணுசக்தி நிலையத்திலும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என உலகளாவிய அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கிரானாவில் உள்ள அணு ஆயுத சேமிப்பு கிடங்கை இந்திய ஏவுகணைகள் தாக்கியதால், கதிர்வீச்சு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, அணுக்கதிர் வீச்சு கசிவு தொடர்பாக பாகிஸ்தான்தான் விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை எனவும், சமூக ஊடகங்களில் கூறப்படுவதுபோல் கதிரியக்க சம்பவம் நிகழவில்லை என்றும் உலகளாவிய அணுசக்தி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.