நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த 20 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கம்பாறை, அண்ணா நகர், சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்குப் பேரூராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் தேக்கி விநியோகிக்கப்படுகிறது.
கடந்த இரு வாரமாக இந்த குடிநீரை முறையாகச் சுத்திகரிக்காமல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த குடிநீரைக் குடித்த 20 பேருக்கு கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.