கள்ளக்குறிச்சியில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விசிக நிர்வாகிக்குக் காவல் உதவி ஆய்வாளர் ராயல் சல்யூட் அடித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 615 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 500-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கில் A2 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள விசிக மாவட்ட செயலாளர் திராவிட மணியும் நீதிமன்றத்தில் அஜாரானார்.
நீதிமன்ற வளாகத்திற்குத் திராவிட மணி வந்தபோது, அங்கிருந்த தியாக துருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தன் அவருக்கு ராயல் சல்யூட் அடித்தார்.
இந்நிலையில், உயரதிகாரிகளுக்கு அடிக்க வேண்டிய ராயல் சல்யூட்டை ஒரு உதவி ஆய்வாளர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.