தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்தொடரில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நஹட் நுயனுடன் மோதினார். ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18 க்கு 21, 21 க்கு 9, 17 க்கு 21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.